
சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
அனகா, ஷிரின் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தில், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் காமெடியனாக யோகி பாபு இணைந்துள்ளார்.. இதன்மூலம் ‘டகால்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் – யோகி பாபு இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
[youtube-feed feed=1]