அசுரனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால் சென்னை திரும்பியதும் குடும்பத்துடன் நேரம் செல்வு செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து தனது அண்ணன் செல்வராகவன், அக்கா விமலா, கார்த்திகா குடும்பத்துடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தார். அதில் தனுஷ், ஐஸ்வர்யா அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா, செல்வராகவன், அவரின் மனைவி கீதாஞ்சலி, குழந்தைகள் மற்றும் விமலா, கார்த்திகா ஆகியோரின் கணவன்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]