மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். தமிழில் இவர் விஷாலின் ’திமிரு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் ஜுனியர் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி மெல்ல வளர்ந்து ’கம்மாட்டிபாடம்’படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருது வாங்கியவர்.

சமீபத்தில் இவர் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். அதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவரது நிறம் மற்றும் சாதிய ரீதியாக தாக்குதலுக்கு ஆளானார்.

அதைதொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது அவர் மீடூ-வில் புகார் கூறியிருந்தார் .

இந்நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.