பாழும் வயிறே பசிக்காதே – அன்னதானத்தின் மகிமை
அன்னதானம் குறித்த ஜே எஸ் கே ஆன்மீகம் – அறிவுரை – இந்துமதம் முகநூல் பக்க பதிவு
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.
“எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ”
அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.
அன்னதானத்தில்தான் ஒருவரைப் பூரணமாக திருப்திப்படுத்த முடியும்.
பணம்,
காசு,
வஸ்திரம்,
நகை,
பூமி,
வீடு
இது போன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள்,
அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை.
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே “அன்னதானம்” என்கிற உயரிய தானம்.
அன்னதானத்தால் பிராணனையும்,
பிராணனால் பலத்தையும்,
பலத்தால் தவத்தையும்,
தவத்தால் சிரத்தையையும்,
சிரத்தையால் புத்தியையும்,
புத்தியால் மனத்தையும்,
மனத்தால் சாந்தியையும்,
சாந்தியால் சித்தத்தையும்,
சித்தத்தால் நினைவையும்,
நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும்,
ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும்,
விஞ்ஞானத்தால் ஆத்மாவையும்
பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்குச் சமமாகும்.