சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழை கற்றுக்கொள், உன்னை எங்கே கொண்டு வைக்கிறேன் பார் என்று சொன்னார் இயக்குநர் பாலசந்தர்!” தமிழ்மக்களை குறிப்பிட்டு பாலசந்தர் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மேலும் நான் அடிக்கடி பார்க்கும் படம் காட்பாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம் :கமல் அரசியலுக்கு வந்தாலும் , கலையுலகத்தை மறக்கமாட்டார் . கமல் மீது பாலச்சந்தருக்கு மிகவும் பிரியம். என கூறினார்
பாலச்சந்தர் சிலையை யார் வேண்டுமானாலும் வைக்கலாம், கமல் வைப்பதில் குறியீடு இருக்கிறது.” என இயக்குனர் மணிரத்னம் பேசினார்.
எங்கள் இருவர் கையையும் யாராலும் பிரிக்க முடியாது ,அறிமுகமான முதல் வருடமே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார் நடிகர் ரஜினிகாந்த் , ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியையும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் . எங்களது ரசிகர்கள் சண்டையிட்டாலும் நானும், ரஜினியும் நெருக்கமானவர்களே !” என கமல் கூறினார்.
இதற்கு கற்கண்டு கட்டிகள் மோதி கொண்டால் உதிர்வது சர்க்கரையே என ரஜினி, கமல் குறித்து வைரமுத்து பேசினார் .