சென்னை:

ட்டோக்களில் அதிக மாணவர்கள் ஏற்றிச்சென்றதாக  1275 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்துள்ள போக்குவரத்து காவல்துறை,  ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்று தடை போட்டுள்ளனர்.

சென்னை உள்பட பல நகரப்பகுதிகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை ஆட்டோவில் ரெகுலராக அனுப்பி வைப்பது வாடிக்கை. ஆனால், ஆட்டோ ஓட்டுநர்களின் அதீப பண ஆசை காரணமாக சுமார் 3 பேர் மட்டுமே அமரும் வகையிலான ஆட்டோவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் குரல்கொடுத்து வரும் நிலையில்,போக்குவரத்து காவல்துறை யினர், அதிக குழந்தைகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை மடக்கி எச்சரிக்கை விடுத்ததுடன், அபராதமும் வசூலித்தனர்.

அதன்படி சென்னை நகரில் மட்டும், 1,275 க்கும் மேற்பட்ட ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறும் போக்குவரத்து காவல்துறையினர்,  அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றால், அந்த  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.