சென்னை:
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை மறைவைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அன்று கூடியது. இந்த நிலையில், வரும் 24ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்து உள்ளத.
சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தும், டிடிவி தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து நீக்கியும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுபோல, அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர். இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்றும், அதற்காக அதிமுகவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.