டில்லி
டிவிட்டரில் நீல நிறத்தில் பெயருடன் இருக்கும் டிக் (குறியீடு) இந்தியாவில் சாதிப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி அதை ரத்து செய்யப் பலர் பதிந்துள்ளனர்.
டிவிட்டரில் கணக்கு உள்ளவர்களில் சிலருக்கு அவர்களுடைய பெயருடன் நீலக் நிறத்தில் ஒரு டிக் குறியீடு அளிக்கப்படுகிறது. இதற்கு உலகெங்கும் வரவேற்பு உள்ள நிலையில் இந்தியாவில் அது சாதிப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டிவிட்டர் நிர்வாகம் பரிசோதிக்கப்பட்ட கணக்கு என்பதற்கு இது பொருள் என்றாலும் அதை நீக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஆரம்பித்தற்கான முக்கிய காரணமானது பிரபல எழுத்தாளரான திலிப் சி மண்டல் இன் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகும். அதன் பிறகு மீண்டும் இவருடைய மறுபரிசீலனைக்குப் பிறகு இயக்கப்பட்டது. அவர் தந்து கணக்கு பரிசீலனைக்கு உள்ளானதால் தனது கணக்குக்கு நீல நிற குறியீடுஅளிக்கக் கோரி உள்ளார். அது அவருடைய பதிவின் காரணமாக மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மண்டல் தனது டிவிட்டர் கணக்கில் தலித் குறித்த புத்தகம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை அவர் புத்தக எழுத்தாளரின் அனுமதி பெற்று வெளியிட்ட போதிலும் டிவிட்டர் நிர்வாகம் அந்த பதிவை விதிகளுக்கு புறம்பானது எனக் கூறி தடை செய்துள்ளது. இதை தற்போது காரணம் காட்டி அவருக்கு நீல நிற குறியீடு அளிக்க மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதே நிலை தங்களுக்கும் உள்ளதாகப் பல பிற்படுத்தப்பட்ட, தலித் பதிவாளர்கள் கூறி உள்ளனர். இதற்குப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளவர்களுக்கு இவ்வித குறியீடு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதையொட்டி டிவிட்டர் பயனாளி ஒருவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் 27 பின்பற்றுவோருடன் இருந்த போதே அந்த குறியீடு அளிக்கப்படாததை சுட்டிக் காட்டி உள்ளார். அத்துடன் 8 லட்சம் பின்பற்றுவோரைக் கொண்ட பிரபல தமிழ்ப்பட இயக்குநரான பா ரஞ்சித்துக்கும் இந்த குறியீடு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையொட்டி டிவிட்டர் பயனாளிகள் #CancelAllBlueTicksinIndia என்னும் ஹேஷ் டாகை பதிந்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். அத்துடன் தங்கள் பதிவில் சாதிப் பாகுபாட்டை முன்னிறுத்தும் புளூ டிக் குறியீட்டை இந்தியாவில் உள்ள அனைத்து டிவிட்டர் கணக்கில் இருந்தும் நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.