குணா’ புகழ் திரைக்கதை எழுத்தாளர் ‘சாப் ஜான்’ அளிக்கும் ஒரு அரிய வாய்ப்பு
‘குணா’, ‘குருதி புனல்’, ‘சில்லுனு ஒரு காதல்’ படங்களுக்கு திரைக்கதை எழுதிய திரு.’சாப் ஜான்’, இப்போது எதிர்கால திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பாகமாக, “Short Film To Silver Screen’ : The recipe of ScreenPlays’ (குறும்படங்களிருந்து வெள்ளித்திரைக்கு’: நல்ல திரைக்கதையை எழுதுவது எப்படி?)
என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடை பெற உள்ளது.
சாதாரண ஒரு கதைக்கருவை எப்படி சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவது என்பதில் தொடங்கி, தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் அணுகுமுறை வரை உள்ள பல நுணுக்கங்களை, இந்த இரண்டு நாள் பயிற்சியின் மூலம் கற்றுக் கொடுக்க இருக்கிறார் திரு.’சாப் ஜான்’. கருத்தரங்கங்கத்தின் முடிவில், திரைக்காட்சிகளுக்கு வசனம் எழுதவும் அறிமுகப்பயிற்சி அளிக்கப்படும்.
இதைப் பற்றி திரு. .’சாப் ஜான்’ கூறுகிறார். “தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனின் அடையாளம். திரை உலகில் வெற்றி பெறுவது சுலபம் இல்லை. ஆனால், நம் கனவுகள் மற்றும் திறமையின் மேல் நம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி ஒன்றும் எட்டாக்கனி இல்லை.”
கருத்தரங்கை பற்றி மேலும் விவரங்களுக்கு https://www.screenwrite.in/workshops/ என்ற வலைத்தளத்தை பார்க்கவும். பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் +91 98408 33689 / 9025910044 ஆகிய தொலைபேசி எண்களை அழைத்துத் தொடர்பு கொள்ளவும்..