சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக அங்குள்ள மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது,  சமிபத்தில் நடைபெற்ற 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் உறுதி தெரிவித்தார்.

”இடைத்தேர்தலில் பணநாயகத்தால் ஆளும்கட்சி வென்றது – இது தொடராது -பொதுத்தேர்தலில் இந்த ஆட்சியை மாற்ற மக்கள் தயாராக உள்ளனர். தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது .

மத்திய அரசு NationalEducationPolicy-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம் என்று கடுமையாக விமர்சித்தார்.‘

மேலும், ஏற்கனவே நடைபெற்ற லோக்சபா தேர்தலில், திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றதாக அதிமுகவினர் விமர்சித்தனர. ஆனால், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அப்போ, அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா,  என்று கேள்வி எழுப்பியவர்,  ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதுதான் ஜனநாயக முறை எனக் குறிப்பிட்ட திமுக தலைவர், இதைச் செய்தால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.