ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.
இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இந்த’படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிக துரிதமாக நடந்துவரும் நிலையில் ’ஹேப்பி தீபாவளி மக்களே’என்ற வாழ்த்துச் செய்தியுடன் அப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்….