பரிமலை

ரும் 26 ஆம் தேதி அன்று சித்திரை ஆட்டத் திருநாள் சிறப்புப் பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாத பூஜை நேரங்களிலும்,  சிறப்புப் பூஜை நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது.   அவ்வகையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக் கடந்த 17 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.  அதற்கு அடுத்த நாள் முதல் சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இவ்வாறு 5 நாட்கள் பூஜை நடந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.    அதையடுத்து வரும் 26 ஆம் தேதி அன்று சித்திரை ஆட்டத் திருநாள் பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

அடுத்த நாள் 27 ஆம் தேதி சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நடைபெறுகிறது

அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட உள்ளது.   அதன் பிறகு கோவிலின் மிகவும் முக்கிய உற்சவமான மண்டல பூஜைகளுக்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.