இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது . பல்வேறு மொழிகளில் வெளியான முக்கியமான 12 படங்கள் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
பல புதிய முக்கிய பாலிவுட் திரைப்படங்களும் விழாவில் திரையிடப்படும். அவற்றில் ‘யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ‘கல்லி பாய்’, ‘சூப்பர் 30’ மற்றும் ‘பதாய் ஹோவா’ ஆகியவை அடங்கும்.
திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான பிரியதர்ஷன் தலைமையில் சிறப்பு திரைப்பட ஜூரி தலைமை தாங்குகிறது. இந்திய பனோரமாவின் தொடக்கவிழாப் படமாக அபிஷேக் ஷாவின் குஜராத்தி திரைப்படமான ‘ஹெலாரோ’ ஐ ஜூரிக்குழு தேர்வு செய்துள்ளது.
இவ்விழாவில் விழாவில் தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த சில முக்கியத் திரைப்படங்களும் இடம்பெறும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இன்று அறிவித்தார்.