டில்லி

டிப்பில் பலவீனமாக உள்ள மாணவர்களுக்கு மூன்று வருடத்தில் பி.எஸ்சி பட்டம் அளிக்க ஐஐடி திட்டம் தீட்டி உள்ளது.

நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடியில் சேருவதை மாணவர்கள் ஒரு பெருமையான விஷயமாக கருதி வருகின்றனர்.    இந்த கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் எளிதான காரியம் இல்லை.      இங்குக் கல்வி கற்க விரும்பும் பலரும்  மதிப்பெண் குறைவால் அந்த வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.

ஐஐடி களில் பி டெக் பட்டம் வழங்கப்படுகிறது.  இந்த பட்டத்தை மாணவர்கள் நான்கு வருடங்களில் அதாவது 8 செமஸ்டர்களில் முடிக்க வேண்டும்.   அதே வேளையில் படிப்பில் பலவீனமாக உள்ள பல மாணவர்கள் பாதியில் விலகி விடுகின்றனர்.   மிகவும் கஷ்டப்பட்டு சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகுவது குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி சென்ற வாரம் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான ஐஐடி குழு சென்ற வாரம் கூடி விவாதித்தது.   இந்த விவாதத்தில் நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியின் 23 கல்வி நிலையங்களின் மாணவர் இடையில் வெளியேறும் நிலை குறித்துப் பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் படிப்பில் பலவீனமான மாணவர்கள் மூன்றாண்டுகளில் கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு பிஎஸ்சி பட்டம் வழங்கலாம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.