டில்லி

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியைய் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த ரவீந்திர பட் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

கடந்த 2009 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்து வந்த ரவீந்திரபட் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மேல் முறையிட்டு மனு ஒன்றை விசாரித்து வந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த் விவரங்களை தலைமை நீதிபதி அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத் தரப்பில் தகவல் அறியும் சட்டம் நீதித்துறையை கட்டுப்படுத்தாது என்னும் வாதம் வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திரபடி ஒற்றை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பில், “தகவல் அறியும் சட்டம் என்பது வெளிப்படையாக இயங்கும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. நீதித்துறை வெளிப்படையாக இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வருகின்றனர்” எனக் கூறப்பட்ட்து.

அதன் பிறகு அந்த வழக்கு இரு முறை மேல் முறையிடு செய்யப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வின் கீழ் வழக்கு விசரணை நடந்த போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த உத்தரவை ரத்து செய்தார். அப்போது அவர் நீதித்துறை வெளிப்படையான தனமை கொண்டது என்றாலும் நீதித்துறையின் மாண்பை குறைக்கும் செயலை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு சரியாக 10 வருடங்கள் கழித்து தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக ரவீந்திர பட் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் இவருடன் ராமசுப்ரமணியன், கிருஷ்ண முராரி,மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளனர்.