கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது என்று போடப்பட்ட வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல 100 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு குறைந்த பட்சக் கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது .

செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி ஆன்லைனில் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என்று மொத்தம் 185 ரூபாய் 40 பைசாவை வசூலித்து உள்ளது ரோகிணி திரையரங்க நிர்வாகம் . இதனால் இழப்பீடு கோரி தேவராஜன் வழக்கு தொடர்ந்தார்.

தேவராஜனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், மனஉளைச்சலுக்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கத்திற்கு, நீதிபதி உத்தரவிட்டார்.