டில்லி
நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமற்றம் என்பது நீதித்துறைக்கு அவசியமானது எனவும் அதில் யாரும் தலையிடுவது நல்லது இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள கொலிஜியம் முடிவு செய்கிறது. அவ்வாறு சமீபத்தில் மும்பை தலைமை நீதிபதி அகில் குரேஷியை மத்தியப் பிரதேச மாநிலத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவுக்கு குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்தது.. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி இடமாற்றம் செய்ததற்குச் சென்னை வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அளித்த மனுவின் மீதான விசாரணையில் “நீதிபதிகள் இடமாற்றம், நியமனம் ஆகியவை நீதித்துறைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால் இது குறித்த விமர்சனங்களுக்குக் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிமன்ற நிர்வாக முடிவில் தலையிடுவது நிர்வாகத்துக்குச் சிறிதும் நல்லதல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.