டில்லி

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுமைக்கும் ஒரே பன்முக அடையாள அட்டை கொண்டு வருவது பற்றி அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன்பு ஒரு நாடு ஒரே மொழி என இந்தி மொழியை முன்னிறுத்தி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.     இதற்குத் தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இன்னும் எதிர்ப்பு அடங்காமல் உள்ளது.  இந்நிலையில் இன்று அமித்ஷா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று அமித்ஷா, “நாட்டில் அடையாள அட்டையாக ஆதார், பாஸ்போர்ட், வங்கிக்  கணக்கு, ஓட்டுனர் உரிமம், மற்றும் வாக்காளர் அட்டை என தனித்தனியாக உள்ளது.  இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அடையாள அட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.   இந்த அட்டையின் மூலம் மக்களின் ஒருவர் மரணம் அடைந்தால் அவர் பெயர் உடனடியாக மக்கள் தொகையில் இருந்து நீக்கப்படும்.

வரும் 2021 ஆம் ஆண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  தற்போது மக்களுக்கு அளிக்கப்பட்டு வாரும் பல நலத் திட்டங்கள் உரியவருக்குப் போய்ச் சேராமல் உள்ளது.   இந்த புதிய கணக்கெடுப்பு மூலம் அந்தக் குறை நீக்கப்படும்.   தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம் அரசுக்குப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2011 இல் இதற்கு முன்பு நடந்தது.   அப்போது 2010 ஆம் வருடம் வீடு வீடாக நடந்த கணக்கெடுப்பின் மூலம் இது நடைபெற்றது.   இனி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி மூலம் நடைபெற உள்ளது.   இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதத்தில் இருந்து டிஜிட்டலாக மாற உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.