டெல்லி:

ராகுல் காந்தி ஒரு முட்டாள், மோடி ஒரு மோசடி பேர்வழி  என்று கடுமையாக சாடியுள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி, இந்தியாவுக்குத் தேவையானது ஒரு வகையான பிரெஞ்சு புரட்சி என்று டிவிட் பதிவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்து வருபவர். தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக தமிழன் என்று சொல்லடா என்று தமிழில் டிவிட் செய்து தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். அதுபோல, தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தியதையும் வரவேற்றவர், ஜெ.மறைவைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு  நடராஜ் ஐபிஎஸ் எம்எல்ஏவை முதல்வராக்க வேண்டும் என்றும்,  கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும்,  நாட்டு நடப்பு, நாட்டின் அரசியல் நிலவரம், அரசியல் கட்சித் தலைவர்கள்  குறித்து அவ்வப்போது  பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களையும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது,  ராகுல்காந்தியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ராகுல் காந்தி ஒரு முட்டாள். பிரதமர் மோடியோ ஒரு மோசடி பேர்வழி. இந்தியாவுக்கு தேவையானது என்ன தெரியுமா, பிரென்ச் புரட்சிதான் என்று கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டில்,  மோசடி பேர்வழியை காட்டிலும் முட்டாளையே நம்பலாம். ராகுலிடம் கடந்த சில நாட்களாக நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் மோடியோ நாளுக்கு நாள் மோசமாகி வருகிறார் என்றும் விமர்சித்து உள்ளார்.

கட்ஜுவின் இந்த டிவிட் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.