னடா

ந்தியச் சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி அவரது ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்தார்.  அதன் பிறகு அவர் நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து விலகி தற்போது தன் சொந்த நாடான கனடாவில் வசித்து  வருகிறார்.  சமீபத்தில் சாரா யூடியூபில் வெளியிட்ட வீடியோவில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு கொடுமைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

யூ டியூப் வீடியோவில் சாரா, ” நான்  பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சில காலம் வசித்துள்ளேன்.  அப்போது திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவது குறித்து சில நாட்கள் கற்றுக்கொடுத்துள்ளேன்.

அந்த ஆசிரமத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு  ஒருநாள் அதிகாலையில் ஒரு சிறுமி அழுதுக் கொண்டிருந்தாள்.   நான் அது குறித்து கேட்ட போது அந்த  குழந்தைகளை அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி அடித்துத்  துன்புறுத்தப்படுவதாகக் கூறினாள்.     அத்துடன் தங்களை இவ்வாறு அடித்துத் துன்புறுத்தப்படுவது குறித்து வெளியில் சொல்வது குரு துரோகம் என்று ஆசிரம சிறுவர், சிறுமிகள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி தெரிவித்தாள்.

நான்  இது குறித்து நித்தியானந்தாவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார்” எனத்  தெரிவித்துள்ளார்.    இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..

நித்தியானந்தா ஆசிரமம் சாராவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.    சாரா நித்தியானந்தாவின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையிலும் ஆசிரமத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்று ஆசிரமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ

[youtube https://www.youtube.com/watch?v=jV2KV8uTSaw]