புனே:

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  புனேவில் நடைபெற்ற கட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான  சசிதரூர்  மோடி ஆட்சியை கடுமையான சாடினார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கடந்த  கடந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்து கொண்டிருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியவல்ர,  புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டார், அதையடுத்து,  மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார் என்று கூறியவர், பின்னர் விசாரணையில் அக்லக் கொண்டு சென்றது  மாட்டுக்கறி அல்ல என்று தெரிய வந்தது,  ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.

இது தான் நம்முடைய பாரதமா? இது தான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா?. என்று கேள்வி எழுப்பியவர், அடித்துக்கொல்கின்ற போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி வற்புறுத்துகிறார்கள், இது இந்து தர்மத்திற்கு அவமானம். அதேபோல கடவுள் ராமர் பெயரை சொல்லி கொலைகள் செய்வது, அவருக்கே அவமானம்.

இவ்வாறு அவர் பேசினார்.