
சமுத்திரகனி தான் இயக்கிய நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா இதிலும் நடித்துள்ளார்கள்
இவர்கள் தவிர அஞ்சலி, அதுல்யா, திருநங்கை நமீதா ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
7 பேர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் பெயரில் அஞ்சலி, சமூக போராளியாக நடித்திருக்கிறார். சசிகுமார் ஜீவா என்கிற போராளியாக நடித்திருக்கிறார். திருநங்கை நமீதா வழியாக அந்த மக்களின் வேதனைகள் சொல்லப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel