
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சாம்பியன்’ படத்தில் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கார்த்தி பாடகராக அறிமுகமாகிறார்.
கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி இயக்கியுள்ள இப்படத்தில் விஸ்வா, மிருணாளினி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியிருக்கும் கார்த்தி ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்.
திரையுலகில் பாடுவதற்கு முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் சுசீந்திரன். ‘சாம்பியன்’ படத்துக்காக அரோல் கொரேலி இசையில் உருவான பாடலைப் பாடியுள்ளார் கார்த்தி. இதற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.
அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel