சூரத்: குஜராத்தின் சூரத்திலுள்ள சில பேக்கரி உரிமையாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்தக் கொண்டாட்டத்தை அவர்கள் இந்தாண்டும் தவறவிடவில்லை.

ஒருவர், 7000 கிலோ எடையிலும், 700 அடி நீளத்திலும் பெரிய பிறந்தநாள் கேக் தயாரித்து, அதை சூரத் நகரின் 700 கண்ணியமான நபர்களை வைத்து வெட்டுகிறார்.

மற்றொருவர், 370 பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார். அந்தப் பள்ளிகள் பழங்குடியினர் பகுதிகளில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுல் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி வைத்திருக்கும் ஒருவர், யுனைடெட் இந்தியா விஷன் மற்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகிய காரணங்களை முன்வைத்து மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அறிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடற்ற இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற மோடியின் முயற்சியில் தானும் பங்கேற்க விரும்பி, 12,000 குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாய் அவர் கூறுகிறார். இந்த உணவு பல முக்கியமான சத்துகளை உள்ளடக்கியது என்றும் கூறப்படுகிறது.

மோடியின் பிறந்த நாளுக்கு பிரமாண்ட கேக் தயாரித்து வெட்டுபவதோ, இந்தாண்டின் கேக் ஊழலுக்கு எதிரானது என்று அறிவிப்பு செய்துள்ளார். இந்த கேக் குழந்தைகள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு வழங்கப்படுகிறது.

[youtube-feed feed=1]