டில்லி

காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன்பிரதேசமாக பிரிக்க மூவர் குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அத்துடன் அம்மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன்  பிரதேசமாகவும் லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.  இதனால் காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதட்டம் நிலவி வருகிறது.  மொபைல் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்க மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது.  அந்தக் குழுவில் முன்னாள் ராணுவ செயலர் சஞ்சய் மித்ரா தலைவராகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் மற்றும்  முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த மூவர் குழு நிலம் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரைமுறை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.   உடனடியாக இந்தப் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அடுத்த மாத இறுதிக்குள் இப்பனிகள் முடிவடைந்து  இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.