நியூயார்க்:

மெரிக்காவைச்  சேர்ந்த ஒருவர், விமான பயணத்தின்போது, தனது மனைவி தூங்குவதற்கு ஏதுவாக தனது இருக்கையையும் கொடுத்துவிட்டு சுமார் 6 மணி நேரம் நின்றுகொண்டே பயணித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், விமான இருக்கையில் பெண் பயணி ஒருவர் தூங்கிக்கொண்டிருக்க அருகே ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது,  அந்த பயணி, தனது மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக தன் னது இருக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு சுமார்  6 மணி நேரமாக நின்று கொண்டே பயணித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனால், அந்த விமானம் எங்கு பறந்தது, விமானத்தில் பயணம் செய்த அன்புத் தம்பதி யார் என்ற எந்தவொரு விவரமும் வெளியாகவில்லை.

இந்த புகைப்படத்த பார்த்த அனைவரும் மனைவி மீது அவர் வைத்திருந்த அன்பை  பாராட்டி வருகின்றனர். இவரல்வோ உத்தம புருஷன் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் சுமார் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட லைக்குகளையும் சுமார் 3500 ரீ டிவிட்டுகளையும் தாண்டி வைரலாகி வருகிறது.