தற்போது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களிலேயே, தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பு வகிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசைதான் மிகவும் வயது குறைந்த ஆளுநர் என்ற சிறப்பைப் பெறுகிறார். இவருக்கு வயது 58.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள ஆளுநர்களில் வயது குறைந்தவர் யார்? மற்றும் வயது அதிகமானோர் யார்? என்ற விபரங்கள் வெளியாகியுள்ளது.
நாட்டின் அதிக வயதுடைய ஆளுநர் என்ற பெயரைப் பெறுபவர் ஆந்திராவின் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்தன். இவரின் வயது 85.
தமிழிசைக்கு அடுத்து குறைந்த வயதுடைய ஆளுநராக குஜராத்தின் ஆச்சார்யா தேவ்ரத் (60 வயது) திகழ்கிறார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் (84 வயது) இரண்டாவது அதிக வயதுடைய ஆளுநராக திழ்கிறார்.
மொத்தம் 28 மாநிலங்களில், 60 வயதுக்கு கீழ் ஒருவர், 60 முதல் 69 வயதுகளில் 7 பேர், 70 முதல் 79 வயதுகளில் 14 பேர், 80 முதல் 85 வயதுகளில் 6 பேர் உள்ளனர். ஆக மொத்தம், ஆளுநர்களின் சராசரி வயது 73 என்பதாக உள்ளது.