‘கவிதை பாட நேரமில்லை’ என்ற படம் மூலம் 1987 ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார் யூகி சேது. ‘ரமணா’ பஞ்ச தந்திரம்’ தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார்.
யூகி சேது திரைக்கதையில் பி.ஹெச்.டி படிப்பு மேற்கொண்டவர். திரைப்படங்களின் வெற்றியை திரைக்கதை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.
தற்போது ஒரு புதிய த்ரில்லர் பட த்தினை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ஹிரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் கதை , திரைக்கதை எழுதி இயக்க உள்ளார் யூகி சேது. இப்படத்தின் ஷீட்டிங்கிற்க்காக படக்குழு லண்டன் சென்றுள்ளதாக யூகி சேது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.