டில்லி

ங்கி மோசடி குற்றம் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி 147 லுக் அவுட் நோட்டிஸ் அளித்துள்ளது.

லுக் அவுட் நோட்டிஸ் என்பது மோசடிக் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கும் உத்தரவாகும்.   இந்த உத்தரவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு நிறுவனங்கள் வழங்கி வந்தன   இந்த உத்தரவு குடிபெயர்வுத் துறைக்கு  அனுப்பப்படும்.   அந்த உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது திரும்ப அழைக்கப்படுவார்கள்.

கடந்த 218 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை அளித்தது.   அந்த உத்தரவின்படி வங்கிகளில் மோசடி செய்வோர்  நாட்டை விட்டுச் செல்வதைத் தடுக்க வங்கிகள் இந்த நோட்டிஸை வழங்க அனுமதி அளித்தது.  வங்கியின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் இந்த நோட்டிஸை வழங்க முடியும்.

இந்த நோட்டிஸ் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்  கீழ் புனேவை சேர்ந்த விகார் துர்வே என்பவர் கேள்வி  எழுப்பி இருந்தார்.   அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 147 பேர் வெளிநாடு செல்ல தடைவிதித்து லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நோட்டிஸுகள் குடிபெயர்வு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.