ரியாத்:
மூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சுவுதி அரேபியா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முஃப்ரிஜி அல் ஹக்பனி கூறியதாவது:
சம்பளம் வழங்காதது குறித்து பல்வேறு நிறுவனங்கள் மீது புகார்கள் அமைச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் மூன்று மாதங்கள் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து தொழிலாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
என்னுடன் தொழிலாளர்கள் நேரடியாக உரையாடும் வகையில் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஜெத்தா, ரஃப்பா, அல் த்வாத்மி ஆகிய இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தொழிலாளர்களும் அமைச்சகமும் நேரடியாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.