செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்துக்காக 12 பாடல்களை எழுதவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் .

பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுடன் மணிரத்னமும், ஏ.ஆர். ரஹ்மானும் எப்படி வேலை செய்யலாம் என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். புகார் தெரிவித்த சின்மயியை ஒதுக்கி வைத்துவிட்டு வைரமுத்துவுக்கு மட்டும் வேலை கொடுப்பது நியாயமே இல்லை என பலர் கருத்து கூறியுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனை திரையுலகினர் ஒதுக்கி வைத்தது போன்று வைரமுத்துவையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் முன்னேற்றத்திற்கான சிங்கப் பெண்ணே பாடலில் வேலை செய்த ரஹ்மான் பாலியல் புகாரில் சிக்கியவருடன் கூட்டணி வைப்பது வியப்பாக உள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.