பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வால் மன்னிப்பு கோரியுள்ளார்.
எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சாக்ஷி, மோகன் வைத்தியநாதன், அபிராமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வனிதாவுக்கு – ஷெரினுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் ஷெரின் அழுதபோது “வனிதா உன் மீதுள்ள அக்கறையில் சொல்கிறார். உன்னை பயன்படுத்தி தர்ஷன் வென்றுவிடுவார். வெளியில் உன்னைப் பற்றி வேறு விதமாகப் பதிவாகிறது” என்றார்.
மேலும் தெருவில் ஆயிரம் நாய்கள் குரைக்கும். அதை எல்லாம் கண்டு பயப்பட முடியுமா?” என்று கேட்டார். ”வனிதா என் தோழி. அவரை எப்படி நாய் என்று சொல்ல முடியும்?” என்றார் ஷெரின். அப்போது சாக்ஷி. ”நான் வனிதாவைச் சொல்லவில்லை. பொதுமக்களை (பப்ளிக்கை) சொன்னேன் என்றார். சாக்ஷியின் இந்த வார்த்தைகளால் சமூக வலைதளத்தில் அதிகம் எதிர்ப்பு எழுந்தது. பலரும் அவரை கடுமையாகத் திட்டத் தொடங்கினர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். “அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும், எனது வார்த்தைகள் உங்கள் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.