
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
ரூ.543 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நேற்று சீனாவில் 48 ஆயிரம் திரைகளில் வெளியானது . சீனாவில் தமிழ் மொழியில் சீன சப்-டைட்டிலுடன்தான் இப்படம் வெளியாகி உள்ளது.
நேற்று வெளியான முதல் நாளே 1.23 மில்லியன் யுஎஸ் டாலர்களை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 8.8 கோடி. சீனாவில் வெளியான இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel