மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க பல இயக்குனர்கள் பலமுறை முயற்சித்து தோல்வியுற்றனர் . இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார்.
ஆனால், இதை திரைப்படமாக எடுக்காமல் வெப்சீரிஸாக ரம்யா கிருஷ்ணனை வைத்து எடுத்து கொண்டிருக்கிறார்.
இதற்காக அவருக்கு ஒரு எப்பிசோடுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். குயின்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா நடிக்கிறாராம். மற்றொரு நடிகைக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.