ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானாதாக தற்போதைய அதிபர் தெரிவித்து உள்ளார்.
ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தற்போதைய அதிபர் அதிபராக எம்மர்சன் மநங்காக்வா (Emmerson Mnangagwa) அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.

ஜிம்பாப்வேயில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ புரட்சி மூலம் அதிபர் ராபர்ட் முகாபே (வயது 94) பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இடைக்கால அதிபராக எம்மெர்சன் ம்நாங்காவா பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து எஅதிபர் பதவிக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தற்காலிக அதிபர் எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ந்தேதி நாட்டின் அதிபராக பதவி ஏற்றார்.
இந்த தேர்தல் முடிவை எதிர்த்து நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை அதிபர் எம்மர்சன் ம்நங்காக்வா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]