மும்பை:

ரூபாய் நோட்டு வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பான வழக்கில்,  இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து உணர  இத்தனை ஆண்டுகள் ஆனதா? ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டு மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பாக, பண மதிப்பை கண்டறிய முடிவதில்லை என்றும், தாங்கள் எளிதில் பயன்படுத்தும் விதமான அடையாளங்களுடன் ரூபாய் வடிவமைப்பு இருக்க வேண்டும் எனவும் என்று தேசிய கண்பார்வையற்றவர்கள் கூட்டமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  பிரதீப் நந்திரஜோக், என்.எம்.ஜம்தர் அமர்வில்  விசாரணை  நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, அப்போது, ரூபாய் நோட்டு மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கான காரணம் குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும்,  உலகில் வேறு எந்த நாடும் இதுபோன்று தங்களின் ரூபாய் மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்களை அடிக்கடி மாற்றுவதில்லை எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக அடுத்த 6 வாரங்களுக்குள் ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியது.

அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, கண்பார்வையற்றவர்கள் பயன்பெறும் விதமாக அவர்களுக்கு தேவையான அடையாளங்களுடன் ரூபாய் மற்றும் காசு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடந்த விசாரணையின்போது தெரிவித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணமதிப்பிழப்புக்குப் பின் இந்திய ரூபாய் நோட்டுக்களின் அளவை பணப்பையில் (wallet) வைக்கும் வகையில் சிறியதாக மாற்றப்பட்டது என ஆர்பிஐ விளக்கம் தெரிவித்தது.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்திய ரூபாய் நோட்டுக்கள் பெரிதாகவும், பணப் பையில் வைக்க ஏதுவாக இல்லை என்பதையும் உணர உங்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆனதா என கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.