கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஆராவரா வரவேற்பை பெற்றது. ஆனால் மீண்டும் இப்படம் பணப்பிரச்சனைகளில் சிக்கியது. இந்தப் படத்தின் ரிலீஸ் கேலிக்கு உள்ளானது.
சமீபத்தில் இப்படத்தின் மீது இருந்த பிரச்சனைகள் முழுதும் முடிக்கப்பட்டதாக படக்குழு வட்டாரம் தகவல்தெரிவித்தன. செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அறிவிப்பு வெளியானது போல் படம் நாளை வெளியாகாது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சில கடன்கள் நிலுவையில் இருப்பதால் அதனை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது. அந்தப் பிரச்னைகள் இன்றே தீர்க்கப்பட்டால் நாளை வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி இல்லையென்றால் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.