ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பங்கேற்றுள்ள ஒரே இந்து பெண்ணான துளசி கபார்ட், இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில், இரு முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அவர் தவறியதால், அவரது வேட்புமனு பரிசீலனையை அது பாதிக்கும் என்று தெரிகிறது.
ஹவாயை சேர்ந்த நான்கு தலைமுறை காங்கிரஸ் பெண்மணி ஒருவர் இரு முக்கிய தகுதிகளில் ஒன்றான 1,30,000 தனி நபர் நன்கொடையாளர்களையும், 20 மாநிலங்களில் குறைந்தது 400 நன்கொடையாளர்களையும் பெற்றுவிட்டார். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே வாக்களிக்கும் மாநிலங்களான லோவா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் தென் கரோலினா மாநிலங்களில் 2% வாக்குகளை பெற அவர் தவறிவிட்டார்.
கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளில், துளசி கபார்ட் தோற்றுவிட்டது உறுதியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக வேறு எந்த விவாதங்களும் நடைபெறாது என்பதால், 3ம் கட்ட விவாதத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த பில்லியனர் டாம் ஸ்டீயர், நியூயார்க் நகர மேயர் பில் டே பிலாசியோ, துளசி கபார்ட் உட்பட 9 பேர் பங்கேற்க வாய்ப்பு குறைவாக இருப்பது என்பது தெரியவந்துள்ளது.
இது இறுதி முடிவு இல்லையென்றாலும், பின்தங்கிய நிலையிலேயே இவர்கள் இருக்கின்றனர். இது தொடர்பாக தனது ஆதரவாளர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ள துளசி கபார்ட், “மீண்டும் விவாத அரங்கில் இருக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் – இல்லாவிட்டாலும், எங்கள் செய்தியை அமெரிக்க மக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
சுய உதவி எழுத்தாளர் மரியான் வில்லியம்சன், முன்னாள் காங்கிரஸ்காரர் ஜான் டெலானி மற்றும் செனட்டர் மைக்கேல் பென்னட் போன்று விவாதங்களில் இருந்து வெளியேறியோர், போட்டியில் தொடர முடிவெடுத்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வெள்ளை மாளிகைக்கு போட்டியிட்ட முதல் இந்து காங்கிரஸ் பெண்ணான துளசி கபார்ட், பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். வெள்ளை மாளிகைக்கான அவரது ஓட்டம் இந்திய அமெரிக்க சமூகத்தில், குறிப்பாக இந்துக்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கபார்ட் முதல் இரு விவாதங்களில் பங்கேற்று, அதில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், செனட்டர்கள் பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சுற்றிலும், அவர் தனது சிறப்பான பங்களிப்பையே கொடுத்திருக்கிறார்.
ஒரளவு இந்திய வம்சாவளியை சேர்ந்த, கமலா ஹாரிஸ் இந்தியர்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் பின்தொடரும் மற்றொரு வேட்பாளராக உள்ளார். தனது தந்தை ஜமைக்கா பகுதியை சேர்ந்தவர் என்பதால், தன்னை ஆப்ரிக்க அமெரிக்கனாக அவர் அதிகம் காட்ட கமலா ஹாரிஸ் முற்பட்டு வருகிறார். முதல் 5 இடங்களில் உள்ள வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
கலிபோர்னியாவை சேர்ந்த முதன் முறை செனட்டர் 2வது விவாதத்தின் போது இன ரீதியிலான கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி, கமலா ஹாரிஸ் தான் தாங்கள் விரும்பும் வேட்பாளர் என மக்களால் கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அவற்றை தக்க வைக்க கமலா ஹாரிஸ் தவறிவிட்டார்.