
நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் சென்னையில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி தியாகராய நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்ததால், கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]