
2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், நடிகையான மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.
அவர் மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருடன் 2017ம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
பணப்பிரச்சினை காரணத்தால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில், மீரா மிதுன் தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தற்போது எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது, ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
Patrikai.com official YouTube Channel