திஸ்புர்:
கிருஷ்ணரைப் போல புல்லாங்குழல் இசைத்தால், மாடுகள் கூடுதலாக பால் கொடுக்கும் என்று அசாம் மாநில பாஜக எம்எல்ஏ கூறி உள்ளார். இது பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த தமிழ்ப்பட மான எங்க ஊரு பாட்டுக்ககாரன் படத்தில், கதாநாயகன் ராமராஜன், மாட்டின் பெயரைச் சொல்லி பால் கறப்பது போன்ற சீன் எடுக்கப்பட்டிருக்கும். இது வியப்பை ஏற்படுத்தியது. அப்போது கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியது.
இந்த நிலையில், அசாம் எம்எல்ஏ திலீப் குமார் பால் புல்லாங்குழல் இசைத்தால், மாடுகள் கூடு தலாக பால் கொடுக்கும் என்று தெரிவித்து உள்ளார். இது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சில்சாரில் ஜன்மாஸ்டமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திலீப் குமார் பால் பேசும்போது, பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்து விவரித்தவர், கிருஷ்ணன் பயன்படுத்திய ஒரு சிறப்பு ஸ்ருதியில் புல்லாங்குழலை இசைத்தால், மாடுகள் பால் தருவது பல மடங்கு அதிகரிக்கிறது என்றும், இது அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ”நான் விஞ்ஞானி அல்ல என்று தெரிவித்தவர், இந்திய கலாசாரத்தில் உள்ள வாஸ்து அறிவியலை நான் படித்தவரை அவை தற்போது நிஜமாகி வருகிறது என்று கூறினார்.
பாட்டுப்பாடி பால் கறக்கும் ராமராஜன் பாடல்… வாசகர்களுக்காக