ஜெயம் ரவி தற்போது ‘ஜன கன மன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அகமது இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக டாப்சி நடித்து வருகிறார். ஜெயம்ரவி ராணுவ வீரராகவும், சர்வதேச ஏஜண்ட் வேடத்தில் டாப்சியும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .