பைரியாட்ஸ், பிரான்ஸ்

ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் உலகத் தலைவர்கள் பங்குபெறும் ஜி 7 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை. ஆயினும் பிரதமர் மோடி மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதின் பேரில் பிரான்ஸ் சென்றார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவு மற்றும் வர்த்தக உறவு மேம்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட்டது. அத்துடன்  தற்போதைய முக்கிய பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே பலமுறை காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறி வந்துள்ளார்.

இந்த சந்திப்பில் காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக பிரதமர் மோடி  இந்த சந்திப்புக்குப் பிறகு மோடி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விவகாரம். இதில் பிறநாடுகள் தலையிடத் தேவையில்லை. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் எனக் கூறி உள்ளார்.

இருநாட்டைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.