கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஆராவரா வரவேற்பை பெற்றது. ஆனால் மீண்டும் இப்படம் பணப்பிரச்சனைகளில் சிக்கியது. இந்தப் படத்தின் ரிலீஸ் கேலிக்கு உள்ளானது.

இந்நிலையில் தற்போது படம் ரிலீஸ் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன . இப்படத்தின் மீது இருந்த பிரச்சனைகள் முழுதும் முடிக்கப்பட்டதாக படக்குழு வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. வரும் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. தேதி முடிவான பின் படக்குழு ரிலீஸை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று மூன்று மணிக்கு பட தொடர்பான தகவல் அதிகாரபூர்வமாக வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]