டில்லி
உலக நாடுகளில் இந்தியாவில் புதிய இன்சுலின் ஊசிகள் விலை 2 -3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் தற்போது நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு இன்சுலின் குறைபாடு உள்ளதால் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது. இதனால் இந்த நோயாளிகள் இன்சுலின் மாத்திரைகளை உட்கொள்ளுகின்றனர். ஆனால் பலருக்கு அது போதுமானதாக இல்லாததால் ஊசி மூலம் இன்சுலின் ஏற்றப்படுகிறது/
முன்பு வழக்கமான சிரிஞ்சு மூலம் இன்சுலின் மருந்து உள் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாம் வகை இன்சுலின் ஊசிகள் அதிகம் சிபாரிசு செய்யப்படுகிறது. முந்தைய முறைப்படி ஒவ்வொரு முறையும் தேவையான அளவு மருந்து சிறிஞ்சில் ஏற்றப்பட்டு அது நோயாளிக்கு செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த புதிய முறைப்படி தேவையான அளவை செட் செய்து விட்டு ஊசியை செலுத்தும் போது அந்த அளவு மருந்து மட்டும் செலுத்தப்படுகிறது.
இந்த புதிய வகை இன்சுலின் ஊசிகள் விலை அதிகமாக உள்ளதாகப் பலரும் குறை தெரிவித்தனர். இது குறித்து பிரபல நீரிழிவு நிபுணர் மார்கரெட் இவான் ஒரு ஆய்வு நடத்தினார். அவர் இந்த ஆய்வை 13 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நடத்தினார். இந்த ஆய்வில் இந்தியாவில் இந்த ஊசிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஊசிகளின் விலை இந்தியாவில் சுமார் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மற்ற நாடுகளில் சுமார் 5.22 டாலர் அளவில் விற்பனை ஆகும் புதிய வகை இன்சுலின் ஊசிகள் இந்தியாவில் சுமார் 13.42 டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களால் இதைp பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
[youtube-feed feed=1]