ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி போன்றோர் வீடியோ கேம்ஸ் விளையாடியும், புத்தகங்களை படித்தும் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.

ஓமல் அப்துல் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் மற்ற நேரங்களில் படம் பார்த்தல் மற்றும் உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.  மெகபூபா முக்தி புத்தகங்கள் வாசிப்பதிலும், தொழுகையிலும் நேரத்தை செலவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னதாக காஷ்மீரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  பிரதான அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட குறைந்தது 700 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலை வர்கள், பிரவினைவாதிகள் இன்னும் வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டு உள்ளனர்.  சுமார் 12 நாட்களை கடந்தும் அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். வெளி உலகத் தொடர்பில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு உள்ளனர். தொடக்கத்தில்  அப்துல்லாவும் முப்தியும் ஹரி நிவாஸ் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டனர், ஆனால்,  ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்தபோது, ​​அரண்மனை மைதானத்தில் உமர் நடந்து செல்வதை மெஹபூபா முப்தி தனது அறையிலிருந்து பார்த்ததாகவும், தனக்கும் அதுபோல அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுக்கவே  இது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும்,  அப்துல்லா குடும்பத்தின் கொள்கைகள் காரணமாக காஷ்மீர் இத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக, பாஜகவுடன் சேர்ந்து முந்தைய அரசாங்கத்தை அமைத்ததாக மெகபூபா மீது ஓமர் குற்றச்சாட்டுக்களை வீசியதாகவும், இதனால் இரு தலைவர்களுக்கு இடையே  கசப்பான நிகழ்வு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தனித்தனி  இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, விருந்தினர் மாளிகை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள  ஒமர் அப்துல்லா வீடியோ கேம்களை விளையாடுவதில் தனது நேரத்தை செலவிடுகையில், முப்தி பிரார்த்தனை செய்வதன் மூலமும் புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் தன்னை மும்முரமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஓமர் அப்துல்லா  குப்கர் இல்லத்திலிருந்து ஹரி நிவாஸுக்கு அழைத்துச் செல்லப் பட்டார், அங்கு நேரத்தைச் செலவிட தனக்கு வீடியோ கேம்களை தரும்படி பாதுகாப்பு அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், பெரும்பாலான வீடியோ கேம்களுக்கு இணையம் தேவைப்படுவதால் அதிகாரிகள் அவரது கோரிக்கையை மறுத்தனர்.

இருப்பினும், இணையம் தேவையில்லாத இந்த விளையாட்டுகளின் பழைய பதிப்புகளை தரும்படி கோரிக்கை விடுத்த நிலையில், அவருக்கு இணையம் இல்லாத வீடியோ கேம்ஸ் வழங்கப்பட்டது. மேலும், அவர் ஓய்வாக இருக்கும் சமயங்களில்  நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்து  ரசித்து  வருவதாகவும், சில நேரங்களில்  ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் என்றும், அரண்மனை தோட்டங்களிலும் உலா வருகிறார் என்றும் தெகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

சமீபத்தில், என்.சி. கட்சித்தலைவர்  தலைவர் ஃபாரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், அவர் தற்போது வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அதுபோல, , மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தியும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வில்லை. இவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு மிருகத்தைப் போல தான் கூண்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும்,  என்.சி, பி.டி.பி மற்றும் சஜாத் லோன் மக்கள் மாநாட்டைச் சேர்ந்த வேறு சில முக்கிய அரசியல் தலைவர்கள் தால் ஏரியின் கரையில் உள்ள சென்டார் லேக் வியூ ஹோட்டலில் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதராகவும், சமீபத்தில் சஜாத் லோன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவைக் கோரியபோது, ​​அதிகாரிகள் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.