
’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா புருஷன் என்பதை வைத்து சூரி மிகப்பெரிய காமெடி கலாட்டாவே செய்திருப்பார். இதில், புஷ்பாவாக நடித்தவர் தான் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 ல் பங்கேற்று வெளியான ரேஷ்மா.
இவர் அதற்கு முன்பு ‛வம்சம், வாணி ராணி, ஆண்டாள் அழகர், மரகதவீணை’ தொடர்களில் நடித்தவர். பிக் பாஸின் அழைப்பு வந்ததும் பிக் பாஸ் வீட்டுக்குள் சில நாட்கள் இருந்தவர், தன்னால் முடிந்தவரை ரசிகர்களிடம் நற்பெயரை பெற்றாலும், திடீரென்று எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தில் ,அஜித் – இயக்குநர் வினோத் இணைய உள்ள அடுத்த படத்தின் வேலை தற்போது தொடங்கியிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ரேஷ்மா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சீரியல்களில் சீரியசாக நடித்தாலும் திரைப்படங்களில் காமெடியாக நடிக்கிறவர். அதனால் அஜித் படத்திலும் அவர் காமெடியாக நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]