
ஜெருசலேம்: அமெரிக்க காங்கிரசின் 2 பெண் உறுப்பினர்களான இல்ஹான் ஒமர் மற்றும் ரஷிதா லெய்ப் ஆகியோரை தன் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்திற்கேற்ப இந்த முடிவை மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய அரசின் மீது அமெரிக்க எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
மேற்கண்ட இரண்டு காங்கிரஸ் பெண் உறுப்பினர்களும் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என்று முன்னதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்வாக்கு செலுத்திய காரணத்தினாலேயே இஸ்ரேலின் முடிவில் உடனடி திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இரண்டு காங்கிரஸ் பெண் உறுப்பினர்களும், அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் என்பதால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்நாடு கூறினாலும் அக்காரணத்தை பலரும் நிராகரிக்கின்றனர்.
இஸ்ரேல் போன்ற ஒரு மகத்துவம் பொருந்திய நாடு இப்படி செய்வது அழகல்ல என்றும், இதனால் ஜனநாயக விழுமியங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
[youtube-feed feed=1]