காங்டாக்

சிக்கிம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகிய 10 சட்டப்பேரவை உறுப்பின்ர்கல் பாஜகவில் இணைந்துள்ளன்ர்.

சிக்கிம் மாநில சட்டபேரவையில் 32 தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது 15 தொகுதிகளில் வென்ற சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சியாக இயங்கி வந்தது

சிக்கிம் மாநில எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் இதற்கு முன்பாக டில்லியில் உள்ள பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பல தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் பாஜக ஆட்சியை பிடிக்க பெரிதும் முயன்றும் முடியாமல் போன சிக்கிம் மாநில எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ள பாஜக சிக்கிம் மாநிலத்தில் தனது கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள்து.