டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67. கடந்த ஆட்சியின் போது மோடி அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ்: ஒரு சக்திவாய்ந்த சொற்பொழிவாளர், அனைவரும் எஎளிதில் அணுகக்கூடிய மூத்த அரசியல்வாதி. மக்களிடையே பெரும் மதிப்பை பெற்ற பெண் மந்திரி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை பெருமளவில் தடுத்ததில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 2016 ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் இருந்து, அரசியலில் இருந்து சிறிது சிறிதாக ஒதுங்கியவர், நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடு வதையும் தவிர்த்தார்.

சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக அறிவிப்புக்கு   “என் வாழ்நாளில் என டிவிட் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு  அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகாரத் துறை இலாகாவை வைத்திருந்த இரண்டாவது பெண்மணி அவர், பிரதமராக இருந்தபோது வெளிவிவகார அமைச்சகத்தை சுருக்கமாக வைத்திருந்தார்.

அரியானா அரசாங்கத்தின் அமைச்சர், டெல்லியின் முதல் பெண் முதல்வர் மற்றும் நாட்டின் ஒரு தேசிய அரசியல் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர் போன்ற பல பதவிகளை சுஷ்மா சுவராஜ் வகித்துள்ளார்.